Monday, April 18, 2011

ஞானம் - சில மூட நம்பிக்கைகள்...

ஞானம், ஆன்மீக சாதகங்களுக்காக ஒருவர் முயற்சி செய்யும் பொழுது, முதல் எதிர்ப்பு அவரின் குடும்பங்களில் இருந்துதான் வருகிறது. இந்த  வயசிலேயே ஏன் சன்னியாசி ஆகப் போகிறாய் என்ற கேள்வியை பலரால் தவிர்க்க முடியவில்லை.

ஞானம் என்பது ஏதோ வயதான மற்றும் சன்யாசிகளுக்கு உரியது போன்ற ஒரு தோற்றம் இப்போது இருக்கிறது. ஆனால் உண்மையில் ஞானம் குடும்பஸ்தர்களுக்கே அதிகம் தேவை. அதுவும் இளமையில் இருப்பவர்களுக்குத்தான் ஞானத்தின் தேவை மிக அதிகம்.

ஆன்மீகமும், ஞான மார்க்கமும், ரிடயர்ட் ஆன பின்னால் ஓய்வாக செய்ய வேண்டிய ஒரு பொழுதுபோக்கு என்ற சிந்தனை நம் சமூகத்தில் மிக ஆழமாக இருப்பது கசப்பான உண்மை. இப்போது இது ஓரளவுக்கு மாறி இருந்தாலும் சில வேறுவிதமான அனர்த்தங்களில் இது முடிகிறது.

இப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆன்ம சாதகங்கள் ஏதோ ஒரு சில பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக அல்லது விடுபடுவதற்காகவே செய்கிறார்கள். உதாரணமாக வறுமை, வேலை இன்மை, திருமண நோக்கம், குழந்தை பிறப்பு, மன அழுத்தம், வியாதிகளிலிருந்து விடுதலை.. இப்படி பல...

ஆனால் இது மனிதன் வாழும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறையின் பாடம் என்பது பெரும்பாலோனோருக்கு புரியவில்லை. இந்த பிரச்சினைகளில் இருந்து ஓரளவுக்கு விடுதலை கிடைப்பதுபோல் தெரிந்தாலே சாதகத்தை விட்டுவிடுகிறார்கள்.

இப்போது ஆத்ம சாதகம் என்பது ஞானத்திற்கான வழி என்ற நிலையில் இருந்து ஏதோ தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் சாப்பிடும் மாத்திரை போல இந்த வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு ஒரு யுனிவர்சல் மருந்து என்ற சிந்தனையே மேலோங்கி இருக்கிறது.


இதில் உண்மையில் சாதகம் செய்பவர்கள் பலருக்கே  வேறு ஏதோ உலகத்தில் இருக்கும் ஒன்றுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வும் இருக்கிறது.


ஞானம் என்பது ஒரு சாரார் மட்டுமே அடைவது என்ற மாயத் தோற்றமும் இருக்கிறது.

இந்த உலகில் பிறந்த எந்த ஜீவ ராசியும் ஞானத்தை அடையலாம். எப்போதும் அடையலாம். எவ்வளவு விரைவாக அடைகிறோமோ அவ்வளவு சிறப்பானது. இதற்கு மதம், இனம், மொழி, சாதி எதுவும் தடையில்லை.

மனதின் ஆர்வமும், மன உறுதியும், விடாமுயற்சியும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாத செயலாக்கும் திறமும், குருவின் உபதேசமும், பக்தியும், ஒழுக்கமும், நேர்மையும், இடை விடாத ஆன்ம சாதகமும் ஒருவனை நிச்சயம் ஞானத்தின்பால் கொண்டு சேர்க்கும்.  இது உறுதி..


கடவுளே!! சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்!! இந்த ஞானத்தைப் பற்றிய மூட நம்பிக்கைகள் விலகி அனைவரும் ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!

6 comments:

shanmugavel said...

//ஆனால் இது மனிதன் வாழும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறையின் பாடம்//

it is true

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

சக்தி கல்வி மையம் said...

அனைத்தும் உண்மை.. பயனுள்ள பதிவு.

Sankar Gurusamy said...

அன்புள்ள திரு வேடந்தாங்கல்-கருன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

பாலா said...

அன்புள்ள சங்கர் குருசாமி ஐயா ,

ஞானத்தைப்பற்றிய தங்களின் கருத்து மிகவும் சரியானது .

காற்றுலுப்போதே தூற்றிக்கொள்- என்பதைப்போல ஞானத்தை கிடைக்கும்போது பகுத்தறிவோடு புரிந்து, அறிந்து ,உணர்ந்து வாழ கற்றுக்கொள்ளவேண்டும் .

சித்தர்களை என்று வணங்க ஆரம்பிகின்றோமோ அன்றே ஞானத்திற்கான வாயில் திறக்கபடுகிறது.

http://gurumuni.blogspot.com/
என்றும்-சிவனடிமை-பாலா.

Sankar Gurusamy said...

அன்புள்ள பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....