Monday, April 25, 2011

ஞானமும்.. மதங்களும்..

ஞானம் என்பது மதம் சார்ந்ததா? ஒரு மதத்தை சாராமல் ஞானம் அடைய முடியாதா? எந்த மதத்தில் இருந்தால் ஞானம் கிடைக்கும்? இவை மிகவும் கடினமான கேள்விகள். நம் ஆழ் மனதில் ஞானம் என்பது மதத்துடன் சம்பந்தப்பட்டதாகவே அறிந்திருக்கிறோம்.

உண்மையில் ஞானம் என்பது மதம் சம்பந்தப்பட்டதல்ல. கடவுள் என்பதுவும் ஞானத்துக்கான ஒரு வழியாக இருந்தாலும், அவரின் உருவமோ பெயரோ அதற்கு முக்கியமில்லை. மேலும் கடவுள் இல்லாமலும் ஞானம் அடையலாம்.

மதங்கள் மனிதனை நல் வழிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டன. எப்பொழுது மனிதன் நல் வழியில் இருக்கிறானோ அப்போதே அவன் ஞானப் பயணம் ஆரம்பமாகி விடுகிறது.

உண்மையில் நம்மை அறிவதற்கு இயற்கையாக இருக்கும் ஒரு பாதைதான் நமது இந்த உலக வாழ்க்கை.

ஆத்ம சாதகங்களான குரு உபதேசமும், ஆழ்ந்த பக்தியும், தியானமும் யோகமும் அதைப் பயணத்தை விரைவு படுத்துகின்றன.

இந்த மதத்தினர்தான் ஞானம் அடைய முடியும் என்றோ, இவர்கள் அடைய முடியாது என்றோ நிச்சயம் இல்லை.

கடவுளே இல்லை என்று கூறுபவர்களும்  கடவுளை தூஷிப்பவர்களும் கூட நல்ல மனதும் கருணை சிந்தனையும் பரந்த தன்னலமில்லா  உள்ளமும் கொண்டு வாழ முடியும் என்றால் அவர்களாலும் ஞானம் அடைய முடியும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உள்ளாற ஆழ்ந்து வரவேண்டும். அப்படி வருவதற்குத்தான் யோகமும், தியானமும், பக்தியும் உதவி செய்கின்றன. இவற்றை மதத்திலிருந்து பெறுபவர்கள் நிச்சயம் ஞானம் அடைவார்கள்.

மதம் இல்லாமல் பெற்றவர்களும் ஞானம் அடைவர்.

எல்லா மதத்திலும் பல நல்ல விசயங்களும் சில இந்த காலக்கட்டத்துக்கு தேவையில்லாத விசயங்களும் இருக்கின்றன. ஒரு அன்னப்பறவை போல தேவையானவற்றை கடை பிடித்து தேவை இல்லாதவற்றை விலக்கினாலே நல் வழி புலப்படும். அந்த தெளிவே நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச் செல்லும்.


கடவுளே எல்லாருக்கும் இந்த தெளிவு ஏற்பட்டு ஞானம் அனைவருக்கும் சித்திக்க அருள் செய்யுங்க.

சதுரகிரியாரே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

2 comments:

shanmugavel said...

பலர் ஞானம் பெற்ற பின்னர் அவர்களுக்கென்று மதம் உருவாயிற்று.நல்ல பதிவு.ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை?

Sankar Gurusamy said...

அன்புள்ள ஷண்முகவேல், தாங்கள் கூறுவதும் உண்மையே. மதத்தின் ஆரம்பங்களைப் பற்றி அலசினால் அது மிகப் பெரிய ஆராய்ச்சியாத்தான் இருக்கும்.

தமிழ்மணம் ஏன் வேலை செய்யவில்லை என்று தெரியவில்லை.. இணைக்க முயற்சி செய்தேன் முடியவில்லை.. :-(

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.